Monday, December 12, 2011

விசா இன்டர்வியு அனுபவம்

சாப்ட்வேர்-ல வேலை செஞ்சிகிட்டு வெளிநாடு போகலேன்னா பொன்னு கொடுக்க மாட்டாங்க போல இந்த காலத்துல. நானும் என்னைக்காவது போய்டலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். போகணும்னு ஆசை-லாம் ஒன்னும் கிடையாது. நான் ஆசை பட்டு காலேஜ்-ல சேரல, ஆசை பட்டு வேலைக்கு சேரல, செம்மறி ஆட்டு மந்தை மாதிரி எல்லாரும் என்ன பண்றாங்களோ அதை பண்றது தான் வழக்கம். இப்ப இருக்குற மந்தை-ல எல்லாரும் வெளிநாடு போக தான் முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க, அதனால நானும் போகணும்னு நினச்சேன் அவ்ளோதான். வெளிய வேலை தேடுற அளவுக்கு நம்மகிட்ட சரக்கும் கிடையாது, அதனால இருக்குற இடத்துலேயே எவ்ளோ நாள் இருந்தாலும் இருந்து போறது-நு நினைச்சிகிட்டு இருந்தேன். நம்ம நேரம் பாத்து கண்சொலேட் ஆபீஸ்-ல அப்ப்ருவ் அடிக்கிற ஸ்டாம்ப்-எ தொலச்சிடாங்க போல, லைன்-ஆ திருப்பி அனுப்பிட்டு இருந்தாங்க. அதனால அந்த நம்பிக்கை குறைஞ்சி வேர வேலை தேடுற முடிவுக்கு வந்தேன். அந்த நேரம் பாத்து விசா இனிஷியேட் பண்ண சொன்னாங்க ஆபீஸ்-ல. அதுக்கு ரெஸூம் தயார் பண்ணும்போதே வேலை தேடவும் ரெஸூம் தயார் செய்ய ஆரம்பிச்சேன். அப்பிடி இப்பிடின்னு ஒரு வழியா இன்டர்வியு டேட் வந்துச்சு. வேலைக்கு இல்ல..விசா-கு. நம்ம ரெஸூம் பாத்து ஒரு கம்பெனி காரனும் கூப்பிடல.

விசா ப்ரோசெசிங்-ல கொஞ்சம் கூட நான் ஈடுபாடு காட்டல, எப்பிடியும் ரிஜெக்ட் ஆகபோகுது-னு நினச்சு. ஒன்னொண்ணுக்கும் மேனேஜர் 10 தடவ சொன்னதுக்கு அப்புறம் தான் செஞ்சிகிட்டு இருந்தேன். விசா-கு ஒரு போட்டோ எடுத்தேன் பாருங்க, முகம் கூட கழுவாம அப்டியே போனேன், பிச்சைக்காரன் மாதிரியே இருந்தேன் போட்டோ-ல. அப்படி இப்படி-னு ஒரு வழியா இன்டெர்வியு டேட் வந்துச்சு. அதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி ப்ரீபிங்-னு சொல்லி டிராவல் டிபார்ட்மென்ட்-ல கூப்பிடாங்க. எப்பிடி பேசணும், என்னென்ன எடுத்துட்டு போகணும்-னு எல்லாத்தையும் சொல்லி கடைசியா என்ன பண்ணாலும் கிடைக்காது-நும் சொல்லி ரெம்ப நம்பிக்கை-யா பேசினாங்க. எனக்கு இன்டர்வியு இருந்த அதே நேரத்துல இன்னொருத்தனுக்கும் இருந்துச்சு. அவனும் ப்ரீபிங்-கு வந்து இருந்தான். கொஞ்ச நேரம் மொக்க போட்டுட்டு இருந்தோம். அவன் H1 விசா அப்ளை பண்ணிருந்தான். கிடச்சிடும்னு கொஞ்சம் தைரியமாவே இருந்தான். எனக்கு L1B விசா, அதனால எப்பிடியும் ரிஜெக்ட் ஆகிடும்னு தைரியமா இருந்தேன்.

திங்கட் கிழமை இன்டர்வியு. வெள்ளிகிழமை எனக்கு போன் பண்ணினான், "திங்கட்கிழமை சேந்து போலாம், போறதுக்கு டாக்ஸி புக் பண்ணலாம், போறதுக்கு 500 தான் ஆகும்"-னு சொன்னான். 500 -னு சொன்னதும் எனக்கு பக்குன்னு இருந்துச்சு. வெட்டியா 250 செலவு பண்ணனுமான்னு யோசிச்சேன். "ஆட்டோ/டிரைன்-ல போனா கம்மியாதான ஆகும்"-னு சொன்னேன். டாக்ஸி-ல போன பிரெஷ்-ஆ போய் அட்டென்ட் பண்ணலாம், ஆட்டோ-ல போன களைச்சி போய்டுவோம்-னு சொன்னான். "அடப்பாவி, உனக்கு கிடைச்சிரும் நீ எவளோ வேணா செலவு செய்வ, என்னை ஏன்டா போண்டி ஆக்குற"-னு மனசுக்குள்ள நினைச்சிகிட்டேன். அப்புறம் போனா போகுதுன்னு சரி-னு சொல்லிட்டேன். சனிக்கிழமை மறுபடியும் கால் பண்ணினான், போய்ட்டு திரும்பவும் கார்-ல வந்தா 750 தான் ஆகும், அதுலயே வந்துடலாம்-னு சொன்னான். கொய்யால!! மறுபடியும் மறுபடியும் கடுபேத்திறானே, இவன விட்டுட்டு தனியா ஆட்டோ/டிரைன்-லையே போய்டலாம்னு யோசிச்சேன், அப்புறம் எப்டியும் நான் தனியா போனா ஏகப்பட்ட காமெடி பண்ணுவேன், கூட யாராவது இருந்த ஒழுங்கா போய் சேரலாம்னு அதுக்கும் சரி-னு சொன்னேன்.

ஞாயிற்றுகிழமை காலைல, போட்டுட்டு போக சட்டை இருக்கானு தேடிட்டு இருந்தேன், என்னோட ஒரு வெள்ளை சட்டை இருந்துச்சு,கடைசியா என் ரூம்மேட் போட்டுட்டு போனது, அவன் விசா இண்டர்வியு-கு(அதுவும் ரிஜெக்ட் தான்). எங்கயோ குப்பைல கிடந்துச்சு, சரி துவைச்சு அயன் பண்ணி போட்டுட்டு போலாம்னு நினச்சேன

ஞாயிற்றுகிழமை மதியம், - துவைச்சி ஆகனுமானு யோசிச்சேன், சரி காலர்-ல மட்டுந தான் அழுக்கா இருக்கு, அங்க மட்டும் லைட்-ஆ அலசிட்டு அயன் பண்ணிடலாம்னு நினச்சேன்.
ஞாயிற்றுகிழமை மாலை - சரி இப்ப அலசில-னா என்ன?, காலர்-ல தான அழுக்கு, வெளிய தெரியவா போகுது?,அயன் மட்டும் பண்ணிடலாம்-னு நினச்சேன


திங்கட் கிழமை காலை-ல ஏழு மணிக்கு எந்திரிச்சேன், ரிஜெக்ட் ஆகபோரதுக்கு இப்ப அயனிங் ஒரு கேடா?-னு நினச்சிட்டு சட்டைய அப்டியே சுருட்டி பை-ல போட்டுட்டு, ஒரு டி-ஷர்ட் மாட்டிட்டு கிளம்பினேன்.

டாக்ஸி வந்துச்சு, அவன் அயன் பண்ண ஷர்ட்,டை-லாம் போட்டுட்டு டிப்டாப்-ஆ வந்து இருந்தான், "என்ன டி-ஷர்ட் போட்டுட்டு தான் வர போறயா"-னு கேட்டான். "இல்ல ஷர்ட் பை-ல இருக்கு,அங்க போய் போட்டுக்குவேணு" சொன்னேன். "இவன் எப்டியும் தொன தொன-னு பேசி கடுப்பு ஏத்துவானு நினச்சு, வண்டி-ல உக்காந்ததும் ஒரு நாவல் எடுத்து படிக்க ஆரம்பிச்சுட்டேன். கண்சொலேட் ஆபீஸ் பக்கத்துல வந்ததும் ஷர்ட் எடுத்து போட்டேன். "அய்யய்ய!!! ஷர்ட் அயன் பண்ணவே இல்லையா"-னு கேட்டான். ஓங்கி மூஞ்சிலையே குத்தலாம்னு இருந்துச்சு. எதுவும் சொல்லாம சட்டைய மாட்டிட்டு போய் லைன்-ல நின்னோம்.

கொஞ்ச நேரத்துல மழை தூர ஆரம்பிச்சுது, பைல்-ஆ தலைக்கு வெச்சி நின்னுட்டு இருந்தேன். மழை-கு ஏத்த மாதிரி நிறைய பேர் குடை வித்துட்டு இருந்தாங்க. "அய்யய்யோ!! சட்டை எல்லாம் நினையுது, ஒரு குடை வாங்கலாம்"-னு சொன்னான். குடைக்காரனிடம் "எவ்வளவு பா"-னு கேட்டான். "சின்னது 100 , பெருசு 150 "-னு சொன்னான். "பெருசே வாங்கிக்கலாம் அப்பதான் ரெண்டு பேரும் நிக்கலாம்"-னு சொன்னான். அதுவும் வாங்கியாச்சு. நான் மனசுக்குள்ள கணக்கு போட ஆரம்பிச்சேன், 750 டாக்ஸி-கு அது எப்பிடியும் 800 ஆயிடும், குடை 150 , எப்டியும் ரவுண்டு-ஆ ஆளுக்கு 500 . எப்பவும் மாசக்கடைசில தான் பிச்சை எடுப்போம், இந்த மாசம் கொஞ்சம் முன்னாடியே எடுக்க வேண்டியதுதான்னு நினைச்சிகிட்டேன்.

கொஞ்ச நேரத்துல உள்ள போய் உக்காந்துட்டோம், டோக்கன் நம்பர்-உம் கொடுத்தாச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு "உனக்கு ஒன்னு தெரியுமா?"-னு கேட்டான். என்ன?-னு கேட்டேன். "என் கேர்ள் பிரண்ட் வெளிய காத்துட்டு இருக்கா, நான் ரொம்ப எக்ஸ்சைடெட்-ஆ இருக்கேன்"-னு சொன்னான். "வக்காளி நானும் வந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன் கடுப்பு மேல கடுப்பு ஏத்திட்டே இருக்க நீ!!!"-னு கவுண்டமணி பாணி-ல திட்டி ரெண்டு அடி போடலாம்னு தோனுச்சு. கொஞ்ச நேரத்துல அவன கூப்டாங்க ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சுது, அப்பருவ்-உம் ஆகிடுச்சு. சந்தோசமா பிகர்-அ பாக்க வெளிய போனான்.
நான் காத்துட்டு இருந்தேன். டோக்கன் நம்பர் வேற எங்கயும் டிஸ்ப்ளே ஆகாதாம், கூப்பிடும்போது கவனிக்கனுமாம். அதனால கொஞ்சம் பயமாவே இருந்துச்சு. நான் பாட்டுக்கு எங்கயாவது பராக்கு பாத்துட்டு விட்டுவிடுவேனோ-னு. ரொம்ப நேரம் கழிச்சு ஒரு பத்து நம்பர்-அ லைன்-ஆ கூப்டாங்க, லைன்-ஆ கூப்டதால ஏதோ கவனிச்சு போய் லைன்-ல நின்னுட்டேன். கேட் நம்பர் 8 .இன்டர்வியு எடுக்குறவன் ஒரு 50 +-ல இருந்தான். என் கூட கூபிடவங்க எல்லாம் ஒரே லைன்-ல நின்னோம். எனக்கு பின்னாடி மூணு பேரு முன்னாடி மூணு பேரு. ஒரு பொண்ணுக்கு இண்டர்வியு போய்ட்டு இருந்துச்சு.

மணி அப்போ 11 :15 . 11:20 ஆச்சு, 11:25 ஆச்சு, 11:30 ஆச்சு, ஆனா இன்னும் அந்த ஒரே பொண்ணுக்கு இன்டர்வியு போய்ட்டு இருந்துச்சு. approve /reject எதுவா இருந்தாலும் ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சுடும்-னு நினச்சா இது என்ன கொடுமை-னு கொஞ்சம் பக்குன்னு இருந்துச்சு. என்னதான் நடக்குது-னு கொஞ்சம் எட்டி பாத்தேன், அது இன்டர்வியு மாதிரி-யே தெர்ல, ஏதோ தப்பு பண்ண ஸ்டுடென்ட் பிரின்சிபால்-ட திட்டு வாங்கிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு.11:40 ஆச்சு, ஆனா இன்னும் முடிஞ்சா பாடு இல்ல. எனக்கு புளிய கரைக்க ஆரம்பிச்சுது, ரிஜெக்ட் பண்றதுக்கு எதுக்குடா இவ்ளோ நேரம், சட்டு புட்டு-னு அனுப்ப வேண்டியது தான-னு நினச்சிட்டு இருந்தேன். அப்பதான் ரெசூம், பெட்டிசன்-னு எடுத்து என்ன இருக்கு ஏது-னு பாத்துட்டு இருந்தேன். அப்புறம் ஒரு வழிய அந்த பொண்ணு வெளிய வந்துச்சு, ரிசல்ட் தெர்ல. அடுத்த ஆள் உள்ள போனான், உடனே வெளிய வந்துட்டான்.என்னனு கேட்ட தப்பான பேனல்-னு சொல்லி திருப்பி அனுபிட்டானாம்.அப்டியே அடுத்து போன 2 பேரையும் அனுபிட்டான். அப்புறம் இன்னொருத்தன் போனான், அவனுக்கு இன்டர்வியு போய்ட்டு இருந்துச்சு, அடுத்து நான். தயாரா இருந்தேன். அப்ப தான் கொஞ்சம் பின்னாடி திரும்பி பாத்தேன், பின்னாடி நின்னுட்டு இருந்த பக்கிங்க எவனையும் காணோம். என்னடா ஒரு பக்கியையும் காணோமே-னு சுத்தி முத்தி தேட ஆரம்பிச்சேன், எங்கயும் காணோம். "ஒரு வேலை நம்பர்-லாம்
மறுபடியும் வேற பேனல்-கு கூப்டு இருப்பாங்களோ? அய்யய்யோ கவனிக்கலையே, இப்ப நிக்குறது சரியான பேனாலன்னு தெர்லயே!!... ". உள்ள இருந்தவன் வெளில வந்துட்டான், அடுத்து நான் போனேன்.

டோக்கன் நம்பர் பார்க்கும் முன்னாடியே "நீ எதுக்கு அமெரிக்கா போகணும்"-னு கேட்டான். நான் இருந்த குழப்பத்துல எனக்கு வார்த்தையே வரல......."நான் TCS , motorola , அமெரிக்கா, onsite "-னு ஏதோதோ உளறிட்டு இருந்தேன். டோக்கன் நம்பர் பாத்துட்டு "நீங்க தப்பான பேனல்-கு வந்து இருக்கீங்க"-னு சொல்லிட்டா
ன்.
நான் நினச்சது நடந்துடுச்சு, என்னடா இன்னும் ஏதும் காமெடி பண்ணலயே-னு நினச்சேன், பண்ணிட்டேன். இப்ப பின்னாடி நின்னவங்க எங்க போனைங்கனு தெர்ல, நானும் எல்லா பேனல்-கும் போய் தேடி பாத்தேன், எங்கயும் இல்ல. அங்க இங்க தேடிட்டு கொஞ்ச நேரம் அப்பிடியே சிலை மாதிரி நின்னுட்டு இருந்தேன். கூட வந்தவன் விசா அப்ப்ருவ் ஆகி அவன் ஆள் கூட கொஞ்சிகிட்டு இருக்கான், நான் இங்க என்ன பண்றது, எங்க போறதுன்னு தெரியாம பேந்த பேந்த முழிச்சுட்டு நின்னுட்டு இருக்கேன். அட்டென்ட் பண்ணி ரிஜக்ட் ஆனா பரவால, அட்டென்ட் பண்ணாமலே போனா காரி துப்புவாங்களே. மறுபடியும் தேட ஆரம்பிச்சேன். இருக்குற 8 பேனல்-அ எத்தனை தடவ தான் தேடுறது. அப்புறம் பாத்தா 2 பேனல் ஒரு மூலைல வெளிய இருந்து பாத்தா தெரியாத மாதிரி இருந்துச்சு. அங்க போய் பாத்தேன், அங்க தான் நின்னுட்டு இருந்தாங்க அந்த நாலு பேரும். அதுல ஒருத்தன்கிட்ட கேட்டேன் "என்னங்க அங்க இருந்து இங்க வந்துடீங்க?"-னு. "நம்பர்-லம் முன்ன தப்பா கூபிட்டுடான்களாம், மறுபடியும் இந்த பேனல்-கு கூப்டாங்க"-னு சொன்னான். "என் நம்பர் கூபிட்டன்களா"-னு கேட்டேன். "தெரில"-னு சொல்லிட்டான். சரி இதுவாதான் இருக்கும்-னு ஒரு நம்பிக்கை-ல நின்னேன். எல்லாரும் போனதுக்கு அப்புறம் கடசியா நின்னுட்டு இருந்தேன்.

ஏற்கனவே அங்க கேள்வி கேட்டப்போ உளறினது ஞாபகம் வந்துச்சு. அதனால கொஞ்சம் என்ன சொல்றதுன்னு யோசிச்சு வச்சேன். அப்புறம் ஒரு வழியா எல்லாதுக்கும் முடிஞ்சு நான் உள்ள போனேன். இன்டர்வியு எடுத்தது ஒரு பொண்ணு. அதே கேள்வி தான் முதல்ல. ஏதோ சொன்னேன். அப்புறம் ஏதோதோ கேக்க நானும் கதை அளந்து விட்டேன், 2 நிமிடம் கூட இருக்காது, ஸ்டாம்ப் எடுத்து பாஸ்போர்ட்-ல குத்த ஆரம்பிச்சுட்டா. கொஞ்சம் எட்டி பாத்தேன், ஒன்னும் தெரில, ஏதோ "R " எழுத்து மட்டும் பளிச்சுன்னு தெரிஞ்சுது. சரி ரிஜக்ட் தான் போல-னு நினச்சேன். அப்புறம் எல்லா பேப்பர்-உம் திருப்பி குடுத்துட்டா. பாஸ்போர்ட்-அ எடுத்து மூளை-ல போட்டுட்டா. அடிச்ச ஸ்டாம்ப்-அ பாத்தேன். approved -உம் இல்ல rejected -உம் இல்ல. Application Received -னு இருந்துச்சு. எனக்கு ஒன்னும் புரியல. அங்கேயே கொஞ்ச நேரம் தலைய சொறிஞ்சிகிட்டு நின்னேன். அவ மதியம் சாப்பாட்டுக்கு கிளம்ப ஆரம்பிச்சுட்டா. நான் நின்னுட்டு இருக்குறத பாத்து "என்ன?"-னு சைகைலையே கேட்டா. "my passport ??" -னு கேட்டேன். (விசா இன்டர்வியு வரலாற்றிலேயே பாஸ்போர்ட்-அ தானா திருப்பிக்கேட்ட ஒரே ஆள் நானா தான் இருப்பேன்). கொரியர்-ல அனுப்புவோம்-னு சொன்னா. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் தான் விளங்குச்சு எனக்கு விசா கிடைச்சிடுச்சு-னு. என்னால நம்பவே முடியல. வெளிய வந்து ரொம்ப நேரம் யோசிச்சுட்டு இருந்தேன். சுக்கிரன் எங்கயோ அடிக்கிறான்-னு சொல்வாங்களே அது இது தானோ-னு நினச்சேன்.அப்புறம் ஒரு வழியா உண்மையாவே கிடைச்சிடுச்சு-னு நானே நம்பினதுக்கு அப்புறம் எல்லாருக்கும் போன் பண்ணி சொன்னேன்.

போனில்:
நான்:விசா கிடைச்சிடுச்சு
ரூம் மேட்: டேய் உண்மையாடா?? விளையாடாதடா.......

நான்:விசா கிடைச்சிடுச்சு
மேனேஜர்: என்ன!?!?!?!?!?!?!!?!?!!!!!..............(ஆபீஸ்-ல கத்தவே செஞ்சுட்டார்)

நான்:விசா கிடைச்சிடுச்சு
அப்பா: __________________ (பதிலே இல்ல...ஆனந்த கண்ணீர்)

ஒரு வழியா உண்மைய ஜீரணிச்சு congratulations சொல்றதுக்கு எல்லாத்துக்குமே கொஞ்ச நேரம் ஆச்சு..

4 comments:

  1. semma da..... endha ooruku varra?

    (anand joseph - psg tech)

    ReplyDelete
  2. I'm already in US da. In Pennsylvania...I came on Oct 15...My interview was on Oct 3rd.

    ReplyDelete