கல்லூரி நாட்களில் நான் வாரம் தவறாமல் படித்த இதழ் 'ஆனந்த விகடன்'. பல ஆண்டுகளுக்குப் பிறகு சில நாட்களுக்கு முன் ஒரு தென்னிந்திய மளிகைக் கடையில் அந்த இதழ் என் கண்ணில் பட்டபோது எதேச்சையாக வாங்கினேன். 'வந்தியத்தேவனின் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்' என்ற ஒரு விளம்பரப் பக்கத்தைப் பார்த்தவுடன் குதூகலம் அடைந்தேன். வந்தியத்தேவன் போல வீராணம் ஏரியில் ஆரம்பித்து கோடிக்கரை வரை அந்த சுற்றுப்பயணம் திட்டமிடப் பட்டிருந்தது. தனக்கு மிகவும் பிடித்த சினிமா அல்லது நாவல்-இல் வரும் இடங்களை நேரில் சென்று பார்ப்பது அந்த ரசிகனுக்கு ஒரு தனி இன்பத்தை அளிக்கும். அதே நாவல்களைப் படித்த மற்ற ரசிகர்களால் மட்டுமே அதை புரிந்து கொள்ளமுடியும். அப்படி புரிந்து கொண்ட பல ரசிகர்களுடன் ஒன்றாக அப்படியொரு பயணத்தை மேற்கொள்வது இன்னும் பேரின்பமாகத்தானே இருக்க முடியும்.
ஆகையால் உடனே அந்த விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு அதன் விவரங்களை அறிந்துகொண்டேன். தெரிந்து கொண்ட கையோடு உடனே மனைவியிடம் இதைப் பற்றிக் கூறி, அவளை விட்டுத் தனியாக செல்லவும் அனுமதி வாங்கினேன். அவள் மராட்டிய மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவள் என்பதாலும், இன்னும் தமிழ் பேச முடியாததாலும் அவளை அழைத்துச் செல்வது சாத்தியம் இல்லை. எனினும் நாங்கள் காதலித்த நாட்களிலேயே 'தமிழில் பொன்னியின் செல்வன் எனக்கு மிகப் பிடித்த நாவல்' என்று பல முறை அவளிடம் மணிக்கணக்கில் கடலை போட்டதால், இப்பொழுது அவளுக்கு என்னுடைய ஆர்வத்தைப் புரிந்துகொள்ள நேர்ந்தது. 'கடலை' வெட்டிப்பேச்சு என்று யார் கூறியது? :)
உடனே சுற்றுப்பயணத்திற்கு முன்பதிவு செய்தேன். பூனே-வில் இருந்து சென்னை சென்று வர, விமான டிக்கெட்களையும் முன்பதிவு செய்தேன். பிறகு ஆர்வத்தை அடக்க முடியவில்லை. 2 வாரங்கள் காத்திருக்க வேண்டுமே அதற்குள் பொன்னியின் செல்வன்-ஐ மீண்டும் ஒரு முறை படித்து விடலாம் என்று முடிவு செய்து படிக்கவும் தொடங்கினேன். நான் முதல் முறை படித்தது கிட்ட திட்ட 10 ஆண்டுகளுக்கு முன். இப்பொழுது மறுபடியும் படிக்கும்பொழுதும் அதே சுவாரஸ்யம் இருந்தது. மீண்டும் சோழ நாட்டில் பயணம் செய்ய ஆரம்பித்தேன்.
ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு தடங்கல். கரோனாவைரஸ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. அது நாளுக்கு நாள் பரவி வரும் செய்தி என்னை 10-ஆம் நூற்றாண்டு சோழ நாட்டில் இருந்து இழுத்து வந்தது. இந்தியா-வில் அந்த நோய் பரவி வரும் தருவாயில் இந்தப் பயணத்தை இப்பொழுது மேற்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் பயமும் என்னுள் எழுந்தது.
கரோனாவைரஸ் இன்னும் தமிழ்நாட்டில் பரவ ஆரம்பிக்காததால் பயணத்திற்கு முன்தின நாள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மட்டும் மேற்கொண்டு பயணத்தில் செல்வது என்று முடிவு செய்தேன். பயணத் தேதிகள் மார்ச் 7,8 மற்றும் 9 (ஊரடங்கிற்கு 2 வாரங்கள் முன்பு).
ஒத்த சிந்தனையாளர்கள் கூடி அமர்ந்து விவாதிப்பது தான் உலகத்திலேயே சிறந்த இன்பம் என்று வள்ளுவர் ஒரு குறளில் கூறி இருப்பார். இந்தப் பயணம் அப்படியான ஒரு அனுபவம். ஓர் இனிய பண்டிகை தினத்தன்று அனைத்து உறவினர்களும் கூடி, பொழுதைக் களிக்க அண்டை வீட்டு வதந்திகளை ஆராயாமல் , சினிமா, அரசியல் பேசாமல் ,சிறியோரை பெரியோரும் பெரியோரை சிறியோரும் குற்றம் கடியாமல், வயது வரம்பின்றி அனைவரும் பொன்னியின் செல்வன் நாவல் பற்றியும் சோழர் வரலாறு பற்றியும் உரையாடி லயித்தால் எப்படி இருக்கும்? புத்தகம் விரும்பிக்கு அதைப்பற்றி உரையாட ஒப்பான ஒருவர் கிடைத்தாலே புளகாங்கிதம் அடைந்துவிடுவார்கள். நம் அனைத்து உறவினர்களும் அப்படி அமைவது என்பது கனவிலும் நடக்க இயலாத ஒரு நிகழ்வே அல்லவா?
அனால் அப்படி ஒரு அனுபவத்தை, உணர்வை விகடன் குழுவினர் இந்தப் பிரயாணத்தின் வாயிலாக ஏற்படுத்தித் தந்தனர். என் உறவினர்கள் அனைவரையும் அவர்கள் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்கச் செய்துவிடவில்லை. மாறாக பொன்னியின் செல்வன் படித்த ரசிகர்களை ஒன்று திரட்டி 3 நாள் பயணத்தில் உறவினர்களாக ஆகிவிட்டார்கள். பயணம் தொடங்கிய சில மணி நேரங்களிலே எங்கள் பரஸ்பர உறவினர்கள் கல்கி மற்றும் விகடன் மூலமாக அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிவிட்டோம். இந்த 3 நாள் பயணத்தில் நாங்கள் பேருந்தில் சினிமா பாடல்கள் கேட்கவில்லை, அந்தாக்சரி ஆடவில்லை, சொந்தக்கதை சோகக்கக்கதைகள் பேசவில்லை. முழுக்க முழுக்க பொன்னியின் செல்வன் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம். அதில் எங்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்கள், பிடித்தமான காட்சிகள், அதன் கதைக்களம் பற்றிய வினாடி வினா, அது எங்களுக்குள் ஏற்படுத்திய அனுபவங்கள், அதனால் தமிழ் மீதும் தமிழ் வரலாறு மீதும் ஏற்பட்ட ஈடுபாடுகள் இத்யாதி..இத்யாதி..
பயணத் தொடக்க நாளிலே காலை 5:30 மணிக்கு அனைவரும் அண்ணாசாலையில் உள்ள விகடன் அலுவலகத்தில் கூடினோம். விகடன் தாத்தா சிரித்துக்கொண்டே வரவேற்றார். விகடன் அலுவலகத்தை முதல் முறையாக நேரில் கண்டதே ஒரு இன்பகரமான நிகழ்ச்சியாக இருந்தது. காலை 6 மணி அளவில் எங்கள் பயணம் தொடங்கியது. ஆதி அந்தம் இல்லாத காலவெள்ளத்தில் ஏ.சி வோல்வோ பஸ்ஸில் ஏறி மணிக்கு ஓரிரண்டு நூற்றாண்டு மற்றும் 50-60 கி.மி வீதம் எளிதில் கடந்து வந்தியத்தேவன் தொடங்கிய பயணம் போல் வீராணம் ஏரியை அடைந்தோம். வந்தியத்தேவன் கண்டதை போலவே அந்த ஏரி கடல் போல் விரிந்து தான் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
அதன்பிறகு கடம்பூர். கடம்பூர் மாளிகை இல்லாததால் 10,11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 2 கோவில்களையும் அதில் உள்ள கல்வெட்டுகளையும் கண்டு ரசித்தோம். பிறகு ஆழ்வார்க்கடியான் நம்பி வழிபட்ட வீராணத்து விண்ணகர கோவிலுக்கும் அதன்பிறகு அனந்தீசுவரர் கோவிலுக்கும் சென்றோம். அங்கு இருந்த ராஜராஜசோழன் கல்வெட்டுகளைஆராய்ந்தோம் . ஆதித்தகரிகாலன் கொலை வழக்கு சம்பந்தமான தகவல்களை பார்த்தபொழுது, அதிலும் குறிப்பாக ரவிதாசன் பெயரைப் பார்த்தபொழுது கதையில் அடைந்த அதே அதிர்ச்சிக்கு உள்ளாகி உடலெங்கும் ரோமங்கள் குத்திட்டு நின்றது. அதன் அதிர்ச்சியில் இருந்து மீள எனக்கு சில மணி நேரங்கள் ஆனது. 10 நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த ஒரு படுகொலை இப்பொழுதும் நம்மை பாதிக்கிறது என்றால் அது கல்கியினால்தான்.
அன்று இரவு பொன்னியின் செல்வன் கதையை அனிமேஷன் மூலமாக படமாக்கிக் கொண்டிருக்கும் ஒரு படக்குழு எங்களுக்கு அதன் ட்ரைலர் மற்றும் சில தகவல்களை காண்பித்தார்கள். நந்தினி-ஐ 2 நொடிதான் காண்பித்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற ஒரு ஆபத்தான அழகுடன் ஸ்ரிஷ்டித்திருந்தார்கள்(நந்தினியை பற்றி எழுதாமல் எப்படி இந்த கட்டுரை முடிவு பெரும்? :) ). முடிவில் நாங்கள் கண்ட நிறைகுறைகளை அந்தப்படக்குழுவிடம் பகிர்ந்து கொண்டோம். அவர்கள் சீக்கிரம் பாகம் ஒன்றுக்கான திரைப்படத்தை வெற்றிகரமாக வெளியிட வாழ்த்துக்கள்.
இரண்டாம் நாள் பழையாறை கோவில்களுக்குச் சென்றோம். ஒன்று பொன்னியின் செல்வனில் வரும் திருநந்திபுர விண்ணகரக் கோவில். பின் முழுமை பெறாத ஆனால் கம்பீரமான கீழ்ப்பழையாறையில் உள்ள திருசோமநாதசுவாமி கோவில். அதன்பின் ராஜராஜனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன் மாதேவிக்கு கட்டப்பட்ட பள்ளிப்படைக் கோவில்.தன் சிற்றன்னைக்காக ராஜேந்திர சோழன் கட்டியது. அதற்கான கெல்வெட்டுகள் அந்தக் கோவிலேயே உள்ளது. அந்தக் கோவில்-இல் விசித்திரமான ஒரு சம்பவம் நடந்தேறியது. மிகச்சிறிய அந்தக் கோவிலில் உண்டியல் கூடக் கிடையாது. மற்ற கோவில்களை போல் அந்த கோவிலில் வழிபாட்டிற்குப் பிறகு சில பிரயாணிகள் பூசாரிக்கு காணிக்கை செலுத்த முற்பட்டபோது அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். "நான் கடவுளுக்கு தொண்டு செய்கிறேன். இனி என் வாழ்க்கையில் பணத்துக்கு எந்தவித தேவையும் இல்லை. என் வயிற்றிற்கு தேவை நாளுக்கு 2 முறை உணவு. அதை இறைவன் எப்படியாவது அளித்துவிடுகிறான். நான் பணத்தைப் பெற்று பாவம் செய்ய விரும்பவில்லை" என்று அவர் கூறியபோது எங்களுக்கு புல்லரித்து விட்டது. சில அம்மாக்கள் மனதுருகி உடனே அவர் காலில் விழுந்து தங்களை ஆசிர்வதிக்குமாறு கேட்க அவர் கண்ணிலும் கண்ணீர்த்துளி சிந்தியது. எங்கள் மனது நெகிழ்ந்தது. "உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று நாங்கள் வலியுறுத்த, அவரோ, "முடிந்தால் இந்தக்கோவில் கருவறைக்கு விளக்குகள் வாங்கிவையுங்கள்" என்றார். நாங்கள் அளித்த காணிக்கைகள் மூலமாக அந்த கோரிக்கையை வெகு விரைவில் நிறைவேற்றிய விகடன் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.
அடுத்தகட்டமாக திருப்புறம்பியம் பள்ளிப்படை கோவிலுக்கு பறை இசையுடன் கூடிய வரவேற்புடன் சென்றடைந்தோம். இந்தப்பள்ளிப்படையின் வீர வரலாற்றைக் கல்கி பொன்னியின் செல்வனில் விளக்கி இருந்தாலும் அதை மீண்டும் போர் நடந்த அதே இடத்தில் நின்று அந்தக் கோவில் பூசாரி சொல்லக் கேட்ட போது வீரமும் கம்பீரமும் மனதில் பொங்கி எழுந்தது. இந்தப் பூசாரி மற்றுமொரு மறக்கமுடியாத நபராக அமைந்தார். பிரான்ஸ்-இல் சிற்பக்கலை பயின்றும், 25 நாடுகளுக்கு மேல் பயணம் செய்தும் கடைசியாக தன் குடும்பம் பாதுகாத்து வந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த சிறிய கோவிலை நிர்வகிக்க மீண்டும் தாய்நாடு திரும்பி இப்பொழுது தன மனைவி குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகிறார்.
பிறகு அதே இடத்தில பறை இசைக்கலைஞர்கள் அற்புதமான ஒரு நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார்கள். 45 நிமிடங்கள் அவர்கள் பறை இசைத்துக்கொண்டே ஆடியது அனைவரையும் எழுந்து ஆடும்படி தூண்டியது. அதைச் சிறிதும் கட்டுப்படுத்தாமல் நாங்களும் கடைசியில் அவர்களுடன் ஆடி, இசைத்து மகிழ்ந்தோம். வாழக்கையில் மறக்கமுடியாத ஒரு அனுபவமாக அமைந்தது.
மூன்றாம் நாள் தஞ்சைப் பெரியகோவில் சென்றடைந்தோம். இந்தப்பயணம் தொடங்கும் முன்பே அனைவரும் உற்சாகமாக எதிர்பார்த்த ஒரு தருணம். பிரம்மிக்கவைக்கும் அழகும் கம்பீரமும் குடிகொண்ட கட்டடக்கலையின் உச்சம் தஞ்சை பெரியகோவில். நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம், சூரியன் மட்டும் கொஞ்சம் அவன் பார்வையின் உக்கிரத்தைக் கொஞ்சம் குறைத்தால். தஞ்சைக் கோவில் முன்பு அமர்ந்து பொன்னியின் செல்வன் ஒரு வினாடியாவது படிக்க வேண்டும் என்ற சிறிய ஆசையும் நிறைவேறியது.

பயணத்தின் கடைசி இலக்காக கோடிக்கரை சென்றடைந்தோம். கடற்கரையில் பூங்குழலி போல் 'அலை கடல் தான் ஓய்ந்திருக்க' என்ற பாடலை பாடி மகிழ்ந்தோம். பின் குழகர் கோவிலில் களரி மற்றும் வர்மக்கலை பற்றிய நிகழ்ச்சிகள் எங்கள் பயணத்தை சரியான முறையில் நிறைவேற்றியதுடன் கம்பீரத்துடன் நல்வாழ்வு வாழ்ந்திட உதவும் சில தகவல்களையும் கொடுத்து வழி அனுப்பிவைத்தது.
மறுநாள் காலை புறப்பட்டு சென்னை வரும் வழியில் ஒவ்வொருவராய் விடைபெற்றுக்கொள்ள, ஆனந்தம் கலந்த ஒரு சோகம் அனைவருக்குள்ளும் குடி கொண்டது. கல்லூரிப் படிப்பு முடிவடைந்து நண்பர்களுடன் விடைபெறும் போது ஏற்படும் ஒர் உணர்வை ஒத்தது . வெறும் 4 வருட கல்லூரி பழக்கத்திற்கே அப்படியென்றால், 1000 வருடங்கள் கால வெள்ளத்தில் பயணம் செய்து எங்கள் வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், குந்தவை, நந்தினி மற்றும் பூங்குழலி வாழ்ந்த இடங்களில் உலாவி, அளவளாவி, ஆர்ப்பரித்து திரும்பி வந்தவர்கள் அவ்வாறு உணர்வதில் ஆச்சர்யம் இல்லையே?
Ela. Arumai !!
ReplyDeleteNice narration 👏👏👏👏
ReplyDeleteதங்களின் பதிவு மிகவும் அருமை👏👏👏👏👌👌
ReplyDeleteஅருமையான பதிவு இளா!
ReplyDeleteதீரா தமிழ் காதல்...
ReplyDeleteமலரும் நினைவுகள். அருமையான பதிவு.
ReplyDelete