ராஜ்குமார்-க்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமணம். இன்று அவனுக்கு அவனுடைய நண்பர்கள் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர். அவனுடைய காலேஜ் நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். Scotch, vodka, tequila மற்றும் beer -கள் அறைகளின் நடுவே பலகரங்களைப்போல் அடுக்கி வைக்கப்படிருந்தன. பலகாரங்களை மொய்க்கும் ஈக்களைப்போல் அனைவரும் அதனை மொய்க்க ஆயத்தமாக இருந்தனர்.
"டேய் சனியன்களா....சீக்கிரம் வந்து சபையில உக்கருங்கடா. சட்டுபுட்டுன்னு கச்சேரிய ஆரம்பிப்போம்" என்று கத்தினான் சுந்தர்.
"டேய் அவன் கடுப்பாகி bottle -அ எடுத்து எவன் மண்டையாவது உடைக்கிரதுக்குள்ள வந்து உக்கருங்கடா" என்றான் சந்தோஷ்.
அனைவரும் சட்டென வந்து அமர்ந்தனர். இந்த மாதிரி கச்சேரிகளில் late பண்ணா சுந்தர் எவ்வளவு கடுப்பாவான்னு எல்லாருக்கும் தெரியும். முதலில் tequila சாட், பிறகு அவரவர் விருப்பம்போல் scotch , vodka என்று ஆரம்பித்தனர்.இரண்டு ரவுண்டு முடிந்து எல்லாரும் ஒருமாதிரியா செட்டில் ஆனப்புறம் பேச ஆரம்பித்தனர்.
"சரிடா ராஜ், நீ ஆரம்பி கதை சொல்ல" என்றான் மகேஷ். "என்ன கதை சொல்றது?" என்றான் ராஜ்.
"ம்ம்..காக்கா வடை திருடின கதை. நாயே உன் கல்யாண கதை தான். 'இன்னும் 2 வருஷத்துக்கு கல்யாணம் பண்ண போறது இல்ல, bachelor லைப்-அ நல்ல enjoy பண்ணிட்டு தான் கல்யாணம்'-னு சொல்லிட்டு இருந்த. இப்ப எப்பிடி திடீர்னு 4 மாசத்துல கல்யாணம் நிச்சயம் ஆச்சு?" என்றான் மகேஷ்.
"அதுவா.." என்று இழுத்துக்கொண்டே சுந்தர்-ஐ ஒரு முரை முரைத்தான் ராஜ்.
"ஹைய்யோ!! ஹைய்யோ!!. அந்த கூத்தை ஏன் மச்சி கேக்குறீங்க" என்றான் சந்தோஷ்.
"ஏண்டா? என்னாச்சு?","ஏன்டா சுந்தர்-ஐ முரைச்சான்?","என்ன கூத்துடா?", "சொல்லுங்கடா!! சொல்லுங்கடா!!" என்று அனைவரும் ஒரே நேரத்தில் குய்யோ முய்யோ என்று கத்த ஆரம்பித்தனர்.
"அமைதி..அமைதி" என்றான் சந்தோஷ்.
"எல்லாம் ஒரு பன்னாடை பரதேசி-யால வந்ததுடா" என்று சுந்தர்-ஐ பார்த்து முரைத்துக்கொண்டே சொன்னான் ராஜ்.
"நான் விவரமா சொல்ரேன்டா, எல்லாரும் கேளுங்க" என்றான் சந்தோஷ்.
"டேய் ராஜ் சொல்லட்டுமடா, அவன் கடுப்பாகுகிறதை பார்த்தால் ஏதோ பெருசா நடந்திருக்கும் போல" என்றான் மகேஷ்.
"வேண்டாம், நான் சொன்னா மறுபடியும் கடுப்பானாலும் ஆகிடுவேன். சந்தோஷ்-ஏ சொல்லட்டும்" என்றான் ராஜ்.
சந்தோஷ் கூறத்தொடங்கினான்:
"மூணு மாசத்துக்கு முன்னாடி ராஜ், ஒரு weekend -கு பெங்களூர்-ல இருந்து இங்க வந்து இருந்தான். வர்றதுக்கு முன்னாடியே, 'இந்த வாரம் செம சரக்கு அடிக்கணும், எல்லாம் வாங்கி வச்சிடுங்க நான் வர்றதுக்குள்ள'-னு சொல்லிருந்தான். நாங்களும் ஒரு full + half வாங்கிகிட்டு,சிக்கன்,ஆம்லேட், மிக்சிங் எல்லாம் வாங்கிட்டு வந்து ரெடி பண்ணிட்டோம். வெள்ளிகிழமை நைட் 9 மணி. அவன் உள்ள நுழைஞ்ச வுடனே cheers சொல்லி ஆரம்பிச்சுட்டோம். அப்புறம் ரவுண்டு அதிகமாக அதிகமாக வழக்கம் போல அரட்டை அடிக்க ஆரம்பிச்சோம். ராஜ் சொன்னான், 'மச்சி!! வாழ்க்கை செம போர் அடிக்குதுடா, வேலையும் அலுத்து போச்சு, ஆபீஸ்-குள்ள காலை எடுத்து வைக்கவே கடுப்ப இருக்கு. ஒவ்வொருத்தன் மூஞ்சிய பாக்கும்போதும் எரிச்சலா வருது'. 'எல்லா இடத்துலயும் அதாண்டா, நாங்க மட்டும் என்ன ஜாலியாவா இருக்கோம்' -னு சொன்னான் சுந்தர்"."டேய் அவன் கடுப்பாகி bottle -அ எடுத்து எவன் மண்டையாவது உடைக்கிரதுக்குள்ள வந்து உக்கருங்கடா" என்றான் சந்தோஷ்.
அனைவரும் சட்டென வந்து அமர்ந்தனர். இந்த மாதிரி கச்சேரிகளில் late பண்ணா சுந்தர் எவ்வளவு கடுப்பாவான்னு எல்லாருக்கும் தெரியும். முதலில் tequila சாட், பிறகு அவரவர் விருப்பம்போல் scotch , vodka என்று ஆரம்பித்தனர்.இரண்டு ரவுண்டு முடிந்து எல்லாரும் ஒருமாதிரியா செட்டில் ஆனப்புறம் பேச ஆரம்பித்தனர்.
"சரிடா ராஜ், நீ ஆரம்பி கதை சொல்ல" என்றான் மகேஷ். "என்ன கதை சொல்றது?" என்றான் ராஜ்.
"ம்ம்..காக்கா வடை திருடின கதை. நாயே உன் கல்யாண கதை தான். 'இன்னும் 2 வருஷத்துக்கு கல்யாணம் பண்ண போறது இல்ல, bachelor லைப்-அ நல்ல enjoy பண்ணிட்டு தான் கல்யாணம்'-னு சொல்லிட்டு இருந்த. இப்ப எப்பிடி திடீர்னு 4 மாசத்துல கல்யாணம் நிச்சயம் ஆச்சு?" என்றான் மகேஷ்.
"அதுவா.." என்று இழுத்துக்கொண்டே சுந்தர்-ஐ ஒரு முரை முரைத்தான் ராஜ்.
"ஹைய்யோ!! ஹைய்யோ!!. அந்த கூத்தை ஏன் மச்சி கேக்குறீங்க" என்றான் சந்தோஷ்.
"ஏண்டா? என்னாச்சு?","ஏன்டா சுந்தர்-ஐ முரைச்சான்?","என்ன கூத்துடா?", "சொல்லுங்கடா!! சொல்லுங்கடா!!" என்று அனைவரும் ஒரே நேரத்தில் குய்யோ முய்யோ என்று கத்த ஆரம்பித்தனர்.
"அமைதி..அமைதி" என்றான் சந்தோஷ்.
"எல்லாம் ஒரு பன்னாடை பரதேசி-யால வந்ததுடா" என்று சுந்தர்-ஐ பார்த்து முரைத்துக்கொண்டே சொன்னான் ராஜ்.
"நான் விவரமா சொல்ரேன்டா, எல்லாரும் கேளுங்க" என்றான் சந்தோஷ்.
"டேய் ராஜ் சொல்லட்டுமடா, அவன் கடுப்பாகுகிறதை பார்த்தால் ஏதோ பெருசா நடந்திருக்கும் போல" என்றான் மகேஷ்.
"வேண்டாம், நான் சொன்னா மறுபடியும் கடுப்பானாலும் ஆகிடுவேன். சந்தோஷ்-ஏ சொல்லட்டும்" என்றான் ராஜ்.
சந்தோஷ் கூறத்தொடங்கினான்:
"அப்புறம் அப்படி இப்படி-னு சுத்தி எங்க வருவோம்? girlfriend பத்தி தான்."
"நம்ம கூட்டத்துல தான் ஒருத்தனுக்கு அந்த புண்ணியம் இல்லையே" - என்று குரல் எழுந்தது கூடத்தில் இருந்து.
"ஆமாம், இல்லாதத பத்தி தான்", என்றான் சந்தோஷ்.
"சும்மா இருங்கட எல்லாரும். நீ continue பண்ணுடா" என்றான் மகேஷ்.
சந்தோஷ் தொடர்ந்தான்.
"அப்பறம் girlfriend இல்லன்னு ஆளாளுக்கு பீல் பண்ணின பிறகு, கல்யாணத்துக்கு topic ஜம்ப் ஆச்சு. 'உனக்கு எப்பட கல்யாணம்?' என்று ராஜ்-ஐ பார்த்து கேட்டான் சுந்தர்.'இன்னும் 2 வருசமாவது ஆகுமடா' என்றான் ராஜ். 'டேய் உனக்கு என்னடா? அக்காவா தங்கச்சியா? அவங்களுக்காக வெயிட் பண்றதுக்கு. ஒரே பைய்யன் தான வீட்டுக்கு, சட்டு புட்டுன்னு பண வேண்டியது தான?' என்றான் சுந்தர். 'தனியா இருந்தா? சீக்கிரம் பண்றதா? 27 தாண்டா பசங்களுக்கு சரியான வயசு, 2 வருஷம் கழிச்சு பாத்துக்கலாம்' என்றான் ராஜ்.
'என்னடா நீ, 25 -ல கல்யாணம் பண்ணா 27 -ல அப்பா ஆகிடலாம்-ல, என்னைய பாரு, அக்காக்கு கல்யாணம் பண்ணிட்டு எனக்கு பண்றதுக்கு 28 -29 ஆனாலும் ஆகிடும். புள்ள குட்டி பெத்துக்குரக்குள்ள uncle ஆயிடுவேன். உனக்கு சான்ஸ் இருக்கு ஆனா use பண்ண மாட்டேங்குற' என்றான் சுந்தர். 'நீ பேசுறத பாத்தா நீ தான் பிளான்-லாம் போட்டு ரெடி-ஆ இருக்கபோல, உங்க அப்பகிட்ட வேணும்னா நான் சொல்றேன் 'உங்க பைய்யனுக்கு கல்யாண ஆசை வந்துருச்சு-னு'' - என்றான் ராஜ். 'அட சும்மா இருடா, உளறி கிளறி வைக்கபோற, எங்க அக்கா என்னை கொன்னேபுடுவா' என்றான் சுந்தர். 'உங்க அக்காகிட்ட தான் முக்கியமா சொல்ல போறேன்' என்றான் ராஜ்".
"அப்புறம் இப்படியே பேசிக்கிட்டு இருந்தவனுங்க சண்ட போடா ஆரம்பிச்சுட்டானுங்க, இவன் அவங்க அப்பாவுக்கு போன் பண்றேன்-னு நம்பர் டைப் பண்ணிட்டு கால் பண்ண போறேன்-னு அவன மிரட்ட, அவன் இவங்க அக்காவுக்கு போன் பண்ண போறேன்-னு இவன மிரட்ட, சின்ன குழந்தைங்க மாதிரி சண்ட போடா ஆரம்பிச்சுடானுங்க, பேச்சோட நிருதுவங்கனு பாத்தா, கட்டிபுடிச்சு உருண்டு சண்ட போடா ஆரம்பிச்சுட்டானுங்க, சுந்தர் ராஜ்-ஓட சட்டைய கிழிக்க, ராஜ் சுந்தர்-ஓட லுங்கி-யா கிழிக்க, ராஜ்-ஓட செல் போன் உடைய, நான் 'எப்டியோ அடிச்சுகிட்டு சாவுங்க'-னு தூங்க போயிட்டேன். அதுக்கு அப்பறமும், கத்திக்கிட்டு இருந்தானுங்க, 'நாளைக்கு உங்க வீட்ல-ஆ சொல்லலேனா, நான் இனிமே லுன்கியே கட்டமாட்டேன்'-னு சுந்தரும், 'அப்படி சொன்னீனா லுங்கிய மட்டும் இல்ல, எத எத கிளிப்பேன்னு தெரியாது'-னு ராஜ்-உம் மாத்தி மாத்தி, சவால் விட்டுகிட்டானுங்க, அப்புறம் எனக்கு ஒன்னும் ஞாபகம் இல்ல, நான் நல்லா தூங்கிட்டேன்" என்று முடித்தான் சந்தோஷ்.
சந்தோஷ் முடித்தவுடன், அனைவரும் ஆவலாக ஒரே நேரத்தில் கேள்வி கேட்கத் தொடங்கினர், "அப்புறம் என்ன ஆச்சு?","சுந்தர் சொன்னானா இல்லையா?","படுபாவி சுந்தர், அவங்க அப்பகிட்ட உளறிட்டியா?" என்று.
ராஜ், "ஆமாம், பன்னாடை நாய், எங்க அப்பாவிற்கு போன் பண்ணி உளறிட்டான் எனக்கு கல்யாண ஆசை வந்துடுச்சுன்னு" என்று சொன்னான். அனைவரும் தங்களது பார்வையை நக்கலாக சுந்தர்-இன் பக்கம் திருப்பினர்.
ராஜ், "பாரேன், இன்னும் ஒத்துக்க மாட்டேங்கிறான்" என்று கோபமாக கூறினான்.
சுந்தர், "டேய், நான் தான் ஒத்துகிட்டேனே, நான் பண்ணிருப்பேன், ஆனா சத்தியமா எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல, அன்னிக்கு செம மப்பு, நீ என் லுங்கிய கிளிச்சப்புறம் எனக்கு எதுவுமே நியாபகம் இல்ல" என்றான்,
சந்தோஷ், "அடப்பாவி!! அவனோட அப்பகிட்ட சொல்லலைனா இனிமே வாழ்கையில் லுங்கியே கட்ட மாட்டேன்-னு சபதம் செஞ்சது கூடவா நியாபகம் இல்ல?" என்று கேட்டான். "இல்லடா, அது கூட நியாபகம் இல்ல" என்றான் சுந்தர்.
"இவன்தான் நியாபகமே இல்ல-னு சொல்றானே, அப்புறம் இவன் சொன்னான்-னு எப்படி கண்டு புடிச்சீங்க?" என்று கேட்டான் மகேஷ்.
மகேஷ்,"அப்புறம், உங்க அப்பகிட்ட இத பத்தி நேர்ல கேட்டியா?" என்றான்.
ராஜ், "நான் தண்ணி அடிக்கிற விஷயமே எங்க அப்பாக்கு தெர்யாது, அவர்கிட்ட போயி, 'என் friend ஒருத்தன் மப்புல உளறினானா?'-னு கேக்க சொல்றியா?. அதனால நான் எதுவும் கேட்கல. இப்ப அது கல்யாணத்துல வந்து நிக்குது", என்றான்.
சுந்தர், "சரி, என்ன இப்ப? எல்லாம் நல்ல விஷயத்துல தான முடிஞ்சிருக்கு, 'நாரதர் கழகம் நன்மையில் முடியும்'-ங்கற மாதிரி." என்று கூறி விட்டு நாரதர் போல, "நாராயண!! நாராயண!!" என்று நாரதர் போல நக்கலாக செய்து காட்டி சிரித்தான்.
மற்றவர்களும்,"சரி விடுடா, நாங்க மட்டும் என்ன bachelor லைப்-அ என்ஜாய் பண்ணிட்டா இருக்கோம்?, எல்லார் பொழப்பும் நாறிட்டு தான் இருக்கு, அதுக்கு கல்யாணம் பண்றது எவ்வளவோ மேல், அதனால பீல் பண்ணாதே" என்று ராஜ்-கு ஆறுதல் கூறினர்.
சுந்தர்,"இதுல பீல் பண்ண என்ன இருக்கு? பொண்ணு நல்ல figure -ஆ தன அமைஞ்சு இருக்கு?" என்று கூற, அனைவரும் சுந்தரை பார்த்து முரைத்தனர். ராஜ், கிட்டதிட்ட, பாட்டில்-ஐ கையில் எடுத்து விட்டான். பிறகு சுந்தர் சுதாரித்துக்கொண்டு, "சாரி சாரி, எங்க அண்ணிக்கு என்ன குறைச்சல்-ங்கறத தான் நான் அப்படி கேட்டுட்டேன், உண்மையா சொல்லனும்னா, ராஜ், உன் range -கு எங்க அண்ணி கொஞ்சம் டூ மச் தான்" என்றான்.
மகேஷ்,"டேய், பொண்ணுகிட்ட, நல்லா பேசி பலகிட்டியா? இல்ல மத்த பொண்ணுங்க கிட்ட பேசுற மாதிரி 'Hi , hello , thanks ' மட்டும் தானா?" என்று கேட்டான். ராஜ்,"ம்ம்..அதெல்லாம் நல்லவே பேசுறேன், ஆரம்பத்துல ஒன்னுமே பேச மாட்டேன், அவளா 'என்ன ஒன்னும் பேச மாட்டேங்கற, அதை பத்தி சொல்லு, இதை பத்தி சொல்லு'-னு கேட்டுட்டே இருந்தா..அப்புறமா தான் கொஞ்சம் பேச ஆரம்பிச்சேன். அப்புறம் அப்டியே பழகிடுச்சு" என்றான்.
மேலும், "இருந்தாலும் சில விஷயங்கள், நான் நிறைய கனவு கண்டு வெச்சிருந்தேன், அதெல்லாம் தான் நடக்கல" என்றான். "என்ன?" என்று அனைவரும் chorus -ஆக கேட்டனர்.
ராஜ்,"நாம தான் படிச்சா காலத்துலேயே எந்த போன்னுகிட்டையும் பேசினதோ பழகினதோ கிடையாதே, அதனால கொஞ்சம் கல்யாணத்துக்கு முன்னாடி நல்லா சேந்து ஊர் சுத்தணும்னு நினச்சேன், ஆனா டைம் கிடைக்கல" என்றான்.
மகேஷ்," யு மீன் டேடிங்?" என்று கேட்டான். "கிட்டதிட்ட" என்றான் ராஜ்.
ராஜ் மேலும்,"அதை விட முக்கியமா ஒன்னு நினைத்து இருந்தேன், அதை செய்ய முடியல" என்றான்.
அனைவரும் அதிர்ச்சியில் glass -ஐ கீழே வைத்து விட்டு, "யு மீன்.......?????" என்று இழுத்தனர்.
ராஜ்,"அட அது இல்லடா, ஒரே ஒரு முத்தம், ம்ம் .........கல்யாணத்துக்கு முன்னாடி...ம்ம் ம்ம்ம் ........நினச்சி இருந்தேன், அது முடியாம போய்டுச்சி" என்று பாதி வார்த்தைகளை முழுங்கி பாதி வார்த்தைகளில் அசடு வலிந்து கொண்டே அஷ்ட கோணலாய் முகத்தை வைத்துக்கொண்டு பதில் அளித்தான்.
சுந்தர், "நாங்க முத்தத்தைப் பத்தி தான் கேட்டோம், நீ என்னனு நினச்ச?" என்று நக்கலாக கேட்டு விட்டு, மற்றவர்களுக்கு கண்ணாலே சமிஞ்சை செய்து சிரித்தான்.
மகேஷ், "இன்னும் 24 மணி நேரத்துக்கு மேலே டைம் இருக்குடா, சோ இன்னும் சான்ஸ் இருக்கு' என்றான்.
ராஜ், "மூணு மாசத்துல நடக்காதது இனிமே நடக்கப்போகுதா? i'm over it" என்றான். பிறகு சிறிது நேரம் மேலும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டு இருந்தனர். சற்று நேரம் கழித்து, நித்ராதேவி ஒவ்வொருவராக அனைவரையும் ஆட்கொண்டாள்.
அடுத்த நாள், ராஜ் காலையிலே எழுந்து கல்யாண வேலைகளை பார்க்க சென்றான். மற்றவர்கள் அடுத்த நாள் மாலைதான் எழுந்தனர். எழுந்தவுடன் நேராக கல்யாண மண்டபத்திற்குச்சென்றனர். மண்டபத்தின் நுளைவாயிழில், ராஜ்-இன் பெற்றோர்கள் அனைவரையும் வரவேற்றுக்கொண்டு இருந்தனர். சுந்தர், அவர்கள் முகத்தில் எப்படி முழிப்பது என்று தெரியாமல் மகேஷ் மற்றும் மற்றவர்களின் பின்னல் ஒளிந்து கொண்டு சென்று கொண்டிருந்தான். அனால் ராஜ்-இன் பெற்றோரோ, அவனை வழக்கம் போலவே வரவேற்று உள்ளே அனுப்பினர்.
மறுநாள் விடியற்காலை ராஜ்-இன் திருமணம், இன்று இரவு நிச்சயதார்த்தம், நலுங்கு என்று ஏகப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள். அவன் மிகவும் busy -ஆக இருந்தான். இரவு விருந்துக்கு பிறகு சிறுது ஓய்வு கிடைத்தது அவனுக்கு. அந்த நேரத்தை தன நண்பர்களுடன் கழிக்க அவனுடைய நண்பர்கள் அமர்ந்த இடத்திற்கு வந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்பொழுது, மனபெண்ணின் உறவினர் மகள் ஒருவள், சுமார் 7 -8 வயது நிறைந்த ஒரு பெண் குழந்தை அவனிடம் வந்து ஒரு துண்டு சீட்டை கொடுத்தது. அவன் அதை பிரித்து பார்த்தான். "மொட்டை மாடிக்கு உடனே வரவும்" என்று எழுதி இருந்தது. யார் கொடுத்தார்கள் என்று கேட்பதற்குள் அந்த குழந்தை ஓடி விட்டது. ராஜ், ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தான் சில நேரம். பிறகு மண்டபத்தின் மொட்டை மாடியை நோக்கிச்சென்றான்.
மொட்டைமாடியில் சில்லென்று காற்று வீசிக்கொண்டிருந்தது. யாரும் அங்கு இருப்பது போல் தெரியவில்லை.சுற்றும் முற்றும் பார்த்தான், ஒரு மூலையில் அவனது வருங்கால மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்றான். அவள்தான் வரசொல்லி இருக்கிறாள் என்று அவளை பார்த்ததுமே விளங்கியது அவனுக்கு. அனால் எதற்து என்பது தான் அவனது மரமண்டைக்கு உரைக்கவில்லை.அவள் அருகில் சென்றான், அவள் சிறிய புன்னகையுடன் அவனை பார்த்தாள். அவன் எதுவும் கேட்பதற்கு முன்னாள், அவள், "5 நிமிஷம்தான் இருக்கு, அப்புறம் என்னை கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க" என்றாள். ராஜ், இன்னும் எதுவும் விளங்காமல் திரு திரு என்று விழித்துக்கொண்டு இருந்தான். அவள் அவனருகில் வந்து அவனை முத்தமிட்டாள். அவன் "ஆகா!! இந்த கனவு சீக்கிரம் களைந்துவிட கூடாது" என்று மனதில் நினைத்துக்கொண்டான். அவள் முத்தமிட்டு முடித்த பிறகுதான் இது கனவல்ல நிஜம்தான் என்று அவனுக்கு விளங்கியது. பிறகு அவள், "சரி, உன் லிஸ்ட்-ல் இருந்து இந்த ஒரு விஷயத்தை நீ அளிசுடலாம்" என்றாள்.
"லிஸ்ட்-ஆ? என்ன லிஸ்ட்?" என்று கேட்டான்.
"அடப்பாவி, நேத்து தண்ணி அடிச்சுட்டு நைட் போன் பண்ணி உளறினது எல்லாம் மறந்துடுச்சா? அந்த அளவுக்கு தண்ணி அடிச்சு இருக்க..இது மாதிரி யார் யார்க்கிட்டஎல்லாம் மப்புல உளறி இருக்கியோ தெரியல.ம்ம்... சரி அது தான் கடைசி தடவை, இனிமே நான் allow பண்ணா தான் தண்ணி எல்லாம், அதுவும் லிமிட்-ஆ தான் புரியுதா?" என்றாள். "மேடம் சொன்னா சரிதான்" என்று அசடு வழிந்து கொண்டே சொன்னான். அவள், "சரி நான் போகணும்,கீழே தேடுவாங்க" என்று கூறிவிட்டு மீண்டும் அவன் கன்னத்தில் மிருதுவாக முத்தமிட்டு துள்ளி ஓடினாள்.
ராஜ்,"லிஸ்ட்-ங்கறா, நேத்து நைட் போன் பண்ணேன்-ங்கறா, ஒரு எழவும் புரியலையே" என்று யோசித்துகொண்டிருந்தான். பிறகு தன செல் போன்-ஐ எடுத்து dialling லிஸ்ட்-ஐ பார்த்தான். ஆமாம், நேற்று இரவு 2 மணிக்கு கால் செய்து இருக்கிறான். அவன் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான், அனால் அவன் பேசியதாக அவன் நியாபகத்திற்கு வரவே இல்லை. அவள் " இது மாதிரி யார் யார்க்கிட்டஎல்லாம் மப்புல உளறி இருக்கியோ தெரியல " என்று கூறியது அவனை அவனுடைய கல்யாண கதையை மீண்டும் ஆராயத்தூண்டியது.
No comments:
Post a Comment